என் வணக்கத்துக்குரிய எதிரிகளே!
https://good-d4ys.blogspot.com/2010/09/blog-post_23.htmlஎன் வணக்கத்துக்குரிய
எதிரிகளே!
பகை!
தமிழில் எனக்குப் பிடித்த சொல்
பகை தான் நம்மை
விமர்சனத்துக்குள்ளாக்குகிறது.
என்ன ஆச்சரியம்
பகையாய் விழுந்து
வெற்றியாக முளைக்கிறது!
ஆடையில்லா மனிதன்
அரைமனிதன்!
இல்லை
பகையில்லா மனிதன்
பாதி மனிதன்
உன் நண்பனைப்
பற்றியல்ல உன்
பகைவனைப் பற்றிச் சொல்
உன்னைப் பற்றி சொல்கிறேன்
ஏனெனில்
ஆணவக்காரனுக்கு, ஆணவகாரனும்
கோபகாரனுக்கு, கோபகாரனும்
பகையாதல் சாத்தியமன்று
ஆகவே!
என் எதிரிகளே
கோப கொழுந்துகளே!
உங்களைப் பகையாகப் பெற
எங்கேனும்
எப்பிறவியிலேனும்
ஒற்றைக்கால் தூக்கி
நின்றேனோ?
பகையில் யாரேனும்
ஒருவர் மட்டுமே
பலமாயிருத்தல் சாத்தியம்
அதெப்படி
நீங்கள் கொடுமையில்
அழுத்தம் அழுத்தமாயும்
நான் குணத்தில்
ஆழம் ஆழமாயும்
ஆகவே
என் எதிரிகளே
எச்சரிக்கையாய் இருங்கள்!
நான் மரத்திலிருந்து
உதிர்ந்து போன இலையல்ல
உலகிற்கே உயிர்த்தந்தவன் நான்
உருக்கொடுத்தவள் என்னவள்
என்னவள்! என்னவள்
(க) விதை
இதோ
என்னிடமும் ஆயுதமுண்டு
என் பேனா
உமிழ்வது கண்ணீரையல்ல!
அமிலம்
ஆற்றல் மிகு திராவகம்
ஆகவே
என் எதிரிகளே
சற்று விழித்திருங்கள்.
என் வணக்கத்துக்குரிய எதிரிகளே!, Pada: 6:58 AM