Good Days

இறந்து பார்ப்பது இறவாத ஆசை

https://good-d4ys.blogspot.com/2010/09/blog-post_4649.html

The-Death-Of-Minnehaha-1100x755
எனது கவனம் ஊரார்மேல்
ஊரார் கவனம் என்மேல்.
ஊரை அறிந்த அளவுக்கு
நான் என்னை அறியவில்லை
என்னைப்பற்றி என்னைவிட
ஊராருக்குத்தான் அதிகம் தெரியும்
இறந்து பார்த்தால்தான்
இருந்தது பற்றி அறிய முடியும்
எனவே,
சிலமணி நேரம் இறந்து
ஊரார் வாயால் என்னை அறிந்தபின்
உண்மையாய் இறந்துபோவதே
என் இறவாத ஆசை
Copyright © 2014 Good Days Powered by Blogger - All Rights Reserved