Good Days

அருமை நண்பன் கொசுவுக்கு ஒப்பாரி

https://good-d4ys.blogspot.com/2010/09/blog-post_25.html

mosquito_468x343
பல மாதங்களாக
என்னுடன் ஒரே அறைக்குள்
தங்கியிருந்து
என்னை நினைக்க் முடியாத
இடங்களில் விடாமல் கடித்து
இரவு இரவாக
தூங்காமல் செய்து
என் அருமை நண்பன் கொசுவே!

தூக்கம் முறிந்து
நான் அப்பொழுது
உன்னை திட்டினாலும்
வேறு வழி இல்லாமல்
நேரத்தைக் கழிக்க
நான் புத்தகங்களை படித்ததால்
பல சாதனைகளை
செய்ய முடிந்தது.

ஆகவே தான்
அன்று எனக்கு அவர்கள்
விருது கொடுக்கும்போது
"என் சாதனைகள் அனைத்துக்கும்
ஒரு கொசு காரணம்"
என்று நான் சொன்னதைக் கேட்டு
ஏதோ ஜொக்கு அடிக்கிறேன்
என்று அவர்கள் சிரித்தது
என்னை மிகவும்
மனம் புண்படுத்தியது.

இன்று காலை
உன் உயிரில்லாத உடலை
என் படுக்கை பக்கம் பார்த்து
என் மனம்
வேளிப்படுத்த முடியாத சோகத்தில்
ஆழ்ந்துவிட்டது.
உடைந்துவிட்டேனே
என்பதே உண்மை.

உன் அருமை பெருமைகளை
அறியாத இந்த உலகம்
என் சோகத்தை
புரிந்து கொள்ளாது.
ஆகவே நான் யாரையும் அழைக்காமல்
தனியாகவெ
உனக்கு கருமாதி செய்வேன்.

உன்னை தூற்றும்
இந்த உலகத்தை
மன்னித்துவிடு நண்பனே!
மன்னித்துவிடு!
Copyright © 2014 Good Days Powered by Blogger - All Rights Reserved